பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியாக திகழ்பவர், கஜோல். ஷாருக்கானுடன் தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே என்ற படம் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், இஷ்க, தில்வாலே போன்ற பல படங்களில் நடித்து தன்க்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரும் இயக்குநருமான அஜய் தேவ்கனின் மனைவி இவர். கஜோல், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுக்க போவதாக அறிவித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக்..
பல பிரபலங்கள் அவ்வப்போது சினிமாவில் இருந்தோ அல்லது சமூக வலைதளங்களில் இருந்தோ கொஞ்ச நாள் இடைவெளி எடுத்துக் கொள்வது வழக்கம். ஒரு சில பிரபலங்கள், “நமக்கு எதுக்குடா வம்பு..” என சமூக வலைதளங்களில் கணக்கே வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இவர்களுக்கு அப்படியே ஆபோசிட்டாக சில பிரபலங்கள் 24 மணிநேரமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பர். அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது, ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுவர். அப்படி ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் கஜோல். இவர், இரண்டு நாட்களுக்கு முன்னர், “வாழ்வின் கடினமான தருணத்தில் இருக்கிறேன்…அதனால் சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுக்கிறேன்..” என ஒரு பதிவினை வெளியிட்டுருந்தார்.
இதனால், கஜோலின் ரசிகர்கள் பலர் பெரும் கவலைக்கு உள்ளாகினர். இன்னும் சிலர், “ஈரை பேனாக்கி..பேனை பெருமாளாக்கி..பெருமாளையே பிச்சை எடுக்க விட்ட” கதையாக அஜய் தேவ்கனுக்கும் கஜோலுக்கும் விவாகரத்து ஆகப்போகிறது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர். ஆனால், நடந்த கதையே வேறு..
கருத்துகள்
கருத்துரையிடுக